“மலேசியாவில் நடமாட்டக்கட்டுப்பாடு தேவையா..?” – பேராசிரியர் சுந்திரம்.

CMCO in Malaysia
Picture Courtesy malay mail

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக்கட்டுப்பாடு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. (CMCO in Malaysia)

இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார் கஸானா ஆய்வுக் கழகத்தின் ஆலோசகரும் பேராசிரியருமான ஜோமோ குவாமி சுந்தரம். (CMCO in Malaysia)

“8 மாதத்தில் 9000-க்கும் அதிகமானோர் வேலையிழப்பு”

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஒற்றை தொற்றாக உருவெடுத்தது. மனித தவறா, வேண்டும் என்றே பரப்பப்பட்டதா என்று பல பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

உலக அளவில் பல சாதனைகளை படைத்த பல நாடுகளாலும் இந்த நோய்க்கு ஒரு தடுப்பு மருந்து கண்டறிய முடியாமல் தவித்து வருகின்றது.

போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம், பொருளாதார முடக்கம், வேலை இழப்பு என்று இந்த டிஜிட்டல் உலகம் கண்டிராத ஒரு பெரும் சரிவை இந்த பூமி கண்டு வருகின்றது.

இந்நிலையில் தைவான், ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் செய்யாத ஒரு விஷயத்தை மலேசிய அரசு தற்போது செய்து வருவதாக பேராசிரியர் கூறுகின்றார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தையும் குறிப்பிட்டு அவர்கள் இதுபோன்ற MOC-க்களை விதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

70 பேர் கொண்டிருக்கும் இந்த அரசின் அமைச்சரவை தேவையான தடைகளை முன்வைக்க தவறி விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 6 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே கணினி பயன்படுத்தி வருவதாகவும் அவர்களை தவிர மற்ற மாணவர்கள் எப்படி வீட்டில் இருந்து கல்வி கற்க இயலும் என்றும் அவர் கேள்வி எழுப்பினர். (CMCO in Malaysia)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு கோவிட் 19 மட்டுமே கரணம் அல்ல. மாறாக அரசின் சில ஊரடங்கு விதிகளும் தான் கரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram