‘மலேசியாவை கட்டாயப்படுத்திக்கிறது சீனா’ – புகார் தெரிவிக்கும் தைவான்

taiwan-flag

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தைவானில் இருந்து பயணிகள் மீதான தடையை மீண்டும் அமல்படுத்துமாறு சீனா மலேசியாவை கட்டாயப்படுத்தியதாக தைவானின் வெளியுறவு அமைச்சர் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 5) அன்று கூறினார். ஏன் சீனா இவ்வாறு ஓ=செய்கிறது என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சுதந்திர நாடு என்றும் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றும் கூறும் தைவான், சீனாவில் கொரோனவால் சும்மர் 80,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் இருக்கிறது. இந்நிலையில் சீனாவை ஒப்பிடும்போது சுமார் 42 வழக்குகள் மற்றும் ஒரு இறப்பு தைவானில் பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தைவானில் இருந்து மலேசிய வரும் பயணிகளுக்கு தடை விதிப்பதில் என்ன விதத்தில் நியாயம் உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வினைவியுள்ளார்.

இதனிடையே தற்போது நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, மலேசியாவில் தைவான் நாடு மக்கள் செல்ல பிறப்பிருந்த தடையை தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பரவி வரும் இந்த கொரோனா நோயால் பல நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தியாவில் சுற்றுலா வந்த சில இத்தாலி நாட்டு பயணிகளுக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.