“பதிவு செய்த பயண தேதியில் மாற்றம் செய்யலாமா..?” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை..!

KL to Trichy Flights
Image tweeted by Air India Express

வந்தே பாரத், பிற நாடுகளை போல அண்டை நாடான இந்தியா பிற நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்துச்சென்று வருகிறது.

அண்மையில் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஒரு விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தான் இந்த மீது பணியில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பல மாதங்களாக இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் எனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “மலேசிய – சிங்கப்பூர் ஊழியர்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்” – மலேஷியா பிரதமர்..!

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மற்றும் பிற பயணிகளுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகமப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

விமான டிக்கெட்களை பதிவு செய்த தேதியில் அந்த பயணியால் பயணிக்க இயலாவிட்டால் அந்த பயணி அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் இந்த ஆண்டு இறுதிவரை மீண்டும் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

டிசம்பர் மாதம் 31ம் தேதி அந்த டிக்கெட்களை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

இதுகுறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் மூலம் புக் செய்வதற்கு தனி வழிமுறையையும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram