“கட்டுமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்” – பொதுப்பணித் துறை அமைச்சர்

Malaysia Construction
Picture Courtesy Steel guru

மலேசியாவில் தற்போது பொருளாதார நிறுவனங்கள் செயல்படுவதை போல கட்டிட வேலைகள் உள்பட்ட பல வேலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்ற மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிற நாடுகளை ஒப்பிடும்போது மலேசியாவில் தொற்றின் அளவு குறைவாக இருந்தாலும் முற்றிலும் குறையவில்லை என்பதால் அதிகாரிகள் பலர் மக்களை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மலேசியா – சிங்கப்பூர் : கடற்பாலத்தை கடக்க இலவச பேருந்து வசதி – ஜோகூர் பொது போக்குவரத்துக் கழகம்

இந்நிலையில் மலேசியாவின் பொதுப்பணித் துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மலேசியாவில் கட்டுமான தொழில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிலார்களின் சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வேலையாட்கள் பணிக்கு வரும்போது வாயில் பகுதியில் உடல் வெப்பம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உள்ளனவா என்று சோதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழியர்கள் போக்குவரத்துக்கு நிறுவனம் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விதிக்கப்பட்டுள்ள இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms