“மலேசியாவிற்குள் நுழைய விரும்பும் மலேசியரல்லாதவர்கள்” – மூத்த அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

தற்போது உலகில் லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நோயின் தாக்கம் அண்டை நாடான இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலேசியாவில் அண்மைக்காலமாக தொற்றின் அளவு சற்று குறைத்து வருகின்றது.

இதையும் படிங்க : “கோலாலம்பூர் முதல் கொச்சி வரை” – மீண்டும் தொடங்கிய வந்தே பாரத் சேவை..!

இந்நிலையில் கடந்த சில மதங்களுக்கும் முன்பு நடத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தொடர்ச்சியாக 28 நாட்கள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் நாம் கோவிட் 19ல் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மலேசியாவில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் பிற நாடுகளில் உள்ள ஊழியர்களை (மலேசியர்கள் அல்லாதவர்கள்) தற்போது நாட்டிற்குள் அனுமதிக்கும் எண்ணம் இல்லை என்றும்.தற்போது அவர்களுக்காக எல்லைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவை சுற்றியுள்ள நாடுகளில் இருக்கும் ஊழியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற இந்த தகவலை மூத்த அமைச்சர் இஸ்மாயில் அவர்கள் தெரிவித்ததாக மலேசியா மெயில் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms