“தேசத்தின் நன்மைக்காக கசப்பான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது” – நூர் ஹிஷாம் அப்துல்லா..!

Malaysia Election
Image tweeted by noor hisham abdulla

அண்டை நாடான இந்தியா உலக அளவில் கொரோனா பரவல் உள்ள நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்னனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அங்கு தொற்றின் அளவு சற்றும் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” – கோரிக்கை விடுத்த முன்னாள் பிரதமர்..!

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேஷியா அரசு ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றின் அளவு அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 1,50,000-க்கும் அதிகமான கொரோனா தொற்றின் அளவை கொண்ட நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து பல சர்ச்சைகள் எழ சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தற்போது உள்ளூர் தொற்றுக்களை விட வெளிநாடுகளில் இருந்து வரும் தொற்றின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் மலேசிய அரசு சில இக்கட்டான மற்றும் கசப்பான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எல்லைகளை மேலும் கடுமையாக்குவதை தவிர வேறு வழியில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram