“ஒரு நாயகன் உதயமாகிறான்” – திரையுலம் பிரவேசிக்கும் பிக் பாஸ் தர்ஷன்

பிக் பாஸ் உலகம் முழுதும் நல்ல ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி, ஓவியா தொடங்கி பல நட்சத்திரங்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் மூன்றில் பலரின் மனதை கவர்ந்தவர்கள் இருவர், இலங்கை தமிழர் தர்ஷன் மற்றும் இலங்கை தமிழச்சி லாஸ்லியா.

இலங்கை தமிழரான தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய நாள் முதல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், நாட்கள் செல்ல செல்ல, இவர் தான் பிக் பாஸ் சீசன் மூன்றின் வெற்றியாளராக இருப்பார் என்று பரவலாக பேசப்பட்டது, ஆனால் அவர் இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாதது பலரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உலக நாயகன் கமல் அவர்கள் பங்கேற்றார், அவர் தர்ஷனை வைத்து படம் எடுப்பேன் என்றும் கூறினார்.

tharshan image

பிக் பஸ்ஸில் இருந்து வெளியேறிய நாள் முதல், பல சினிமா வாய்ப்புகள் தர்ஷனுக்கு கிடைத்தது. ஆனால், கமல் தயாரிக்கும் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது தான் தர்ஷனின் விருப்பம் என்று கூறப்பட்டது. பிக் பாஸ் முடிந்தவுடன் இலங்கை சென்ற தர்ஷன், அப்படியே மலேசியா, லண்டன் என்று வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார் தர்ஷன்.

தர்ஷன் தான் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்திற்கான ஏற்பாடுகளை செய்யவே தற்போது சென்னை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல்கள் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் வேண்டும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.