மதுரையில் “நடுவராக” மாறிய மலேசிய முகின் ராவ்

mugin-raao

பிக் பாஸ், இந்திய மொழிகள் பலவற்றில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, பல பிரபலங்களை உருவாக்கி நிகழ்ச்சி என்றும் கூறலாம். தமிழில் உலக நாயகன் கமல் அவர்கள் தொகுத்து வழங்க, சீசன் ஒன்று, இரண்டு, மூன்று என்று எல்லா சீசன்களும் படு ஜோராக நடைபெற்றது. ஹரிஷ் கல்யாண், ஓவியா, லாஸ்லியா, என்று பலரை இந்த நிகழ்ச்சி பிரபலமாகியது. அந்த வரிசையில் மலேஷியா நாட்டை சேர்ந்த முகினும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

mugin-rao

மலேசியா நாட்டை சேர்ந்த முகினுக்கு தற்போது பார் எங்கும் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ்க்கு பின் பல நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இவர் சென்று வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற மெகந்தி உலக சாதனை நிகழ்ச்சியில் முகின் நடுவராக கலந்து கொள்வதற்காக மதுரை சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி அங்கு நடத்தப்பட்ட பெண்களுக்காக அந்த விழாவில் WOMEN ACHIEVER என்ற விருதினை சர்மிளா என்பவருக்கு முகின் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.