COVID – 19 : மலேசியாவில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கோவில் ஜூலை 1 முதல் திறப்பு..?

Murugan Temple
Murugan Temple

உலகம் முழுக்க உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சயாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுதான் தைப்பூசம். மலேசியாவில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க நிலையில் இருந்த கொரோனா காரணமாக உலகம் முழுக்க அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மிக கவனமாக இந்த திருவிழா பிரபல பத்து மலை முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக மலேசியா முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் சுகாதார முன்சேரிக்கை கருதி முற்றிலும் மூடப்பட்டது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து தற்போது மலேசியாவில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 18ம் தேதிக்கு பிறகு கடந்த மே மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் அல்லாத பிற மத வழிபாட்டு தளங்கள் உரிய பாதுகாப்புடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படியில் தற்போது மலேசியாவில் புகழ் பெற்ற ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கோவில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் வழிபாட்டிற்க்கு திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.