‘மலேசிய விமானங்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தடை’ – அதிரடி முடிவை அறிவித்த கம்போடியா..!!

Cambodia
Picture Courtesy ctvnews

உலக அளவில் சில நாடுகளின் விமான போக்குவரத்துக்கு மையமாக அமைந்துள்ளது மலேசியா. இந்நிலையில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் தடை விதித்துள்ளது கம்போடியா அரசு. அந்நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த சில நாட்களாக மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய இடங்களில் இருந்து கம்போடியா வரும் மக்களை சுகாதாரத்துறை சோதித்தபோது அவர்களிடையே தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவந்துள்ளது. ஆதலால் அவ்விரு நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு துறை அறிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற மறுக்கப்படும் நிலையில் வெளிநாட்டவர் நாடுகடந்த செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசிய அரசு தங்களது குடிநுழைவு 66மையத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கம்போடியா அரசு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் விதிக்கும் இந்த புதிய தடை மேலும் பல சவால்களை அளிக்கும் வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms