“தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” – கோரிக்கை விடுத்த முன்னாள் பிரதமர்..!

Mahathir Mohammed
Image tweeted by Mahathir Mohammed

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் 19 பிரச்சனைக்கு முன்பு மலேசியா ஒரு மிகப்பெரிய அரசியல் பிரச்னையை சந்தித்தது என்றால் அது மிகையல்ல.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மலேசியாவில் இருந்து பாயமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா அந்த பாமாயில் வர்த்தகத்திற்கு தடை விதித்தது.

காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இந்தியாவில் அமலில் உள்ள இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் அப்போதைய மலேசியா பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்ததால் தான் இந்த தடை விதிக்கப்பட்டது என்றும் பரவலாக பேசப்பட்டது.

இதையும் படிங்க : “1,50,000க்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள்” – திங்கள் முதல் அமலுக்கு வரும் தடை..!

பல ஆண்டுகளாக நல்லுறவில் நீடித்து வரும் இந்தியாவும், மலேசியாவும் கண்டிப்பாக மீண்டும் இந்த வர்த்தகத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் விரைவில் சீர்செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பல மாதங்கள் கழித்து தற்போது புதிய பிரதமர் மலேசியாவில் பதியேற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் “நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன், ஆனால் என்னுடைய வார்த்தைகளால் பாமாயில் வர்த்தகம் சிக்கலை சந்தித்தது வருத்தமளிக்கிறது.

அநீதிக்கு எதிராக நான் கொடுத்த குரலுக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலேசிய அரசு இலங்கையை சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தற்போது உள்துறை அமைச்சராக முஹிதீன் யாசினை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஈழத்தில் நடந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram