“அதிகரிக்கும் தொற்று – Sabah பகுதியில் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய தடை”

Sabah
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் பரவி வரும் தொற்று குறித்தும், தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்தும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார அமைக்க இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று ஒரே நாளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொற்றின் அளவு அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பிய யாருக்கும் நேற்று தொற்று கண்டறியப்படவில்லை.

இது ஆறுதல் அளிக்கும் செய்தி என்றபோது பெரும் இடியாக நேற்று ஒரு செய்தி வெளியானது.

மலேசியாவில் கடந்த ஆறு மாத காலமாக தொற்று இருந்து வரும் நிலையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 287 பேருக்கு நேற்று உள்ளூரில் தொற்று உறுதியானது.

இதையும் படிங்க : வந்தே பாரத் phase 7 : 181 பயணிகளுடன் திருச்சி நோக்கி பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

kedah மற்றும் sabah ஆகிய பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் MOH வெளியிட்டுள்ள SOP-க்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “மக்கள் தேவை இன்றி வெளியில் செல்வதை தவிர்த்து. அவசியமான விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது தகுந்த பாதுகாப்போடு இருந்தால் மட்டுமே தொற்றின் அளவை குறைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பல பொருளாதார நிறுவனங்கள் திறந்திருப்பது பொருளாதாரத்தை சரிசெய்யவே அன்றி நோய் குரைந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல என்று பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே Sabah பகுதியில் இருந்து விமான நிலையம் வரும் மக்கள் கட்டாய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். மேலும் Sabah பகுதியில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று இரவு முதல் தடை செய்யப்பட உள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உணவு, மருத்துவம் போன்ற அத்யாவசிய சேவைக்காக பயணிப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram