“அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் பதிவு செய்யுங்கள்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

Authorized Travel Agent
Image Tweeted by Air India Express

வந்தே பாரத் திட்டம் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். (Authorized Travel Agent)

மேற்குறிப்பிட்ட இந்த அறிவிப்பினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (Authorized Travel Agent)

கொச்சி – கோலாலம்பூர் : நேற்றுமுதல் தொடங்கிய இம்மாத விமான சேவை.!

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மே மாதம் மாதம் தொடங்கி வந்தே பாரத் திட்டம் அமலில் உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே பயணிகள் தங்களுடைய டிக்கெட்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

இந்தியாவை தலைமையகமாக கொண்டுள்ள அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளது.

“கோலாலம்பூருக்கான டிக்கெட்டுகளை வலைத்தளம் / நகர அலுவலகங்கள் / கால் சென்டர் மையங்கள் / அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என்பதை நினைவில் கொள்க.”

“கோலாலம்பூரிலிருந்து இந்தியாவுக்கான டிக்கெட்டுகளை அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.”

இவ்வாறு அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் சேவைகளுக்கு, மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram