“ஆவணமற்ற அந்நியர்கள்” : தடுப்பூசிக்கு முன்பு பொதுமன்னிப்பு தரவேண்டும் – சார்லஸ்.!

Apology to Migarnts
Image tweeted by Charles Santiago

மலேசியாவில் வசிக்கும் ஆவணமற்றஅந்நியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முன் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. (Apology to Migrants)

இந்த கோரிக்கையை பக்காத்தான் ஹாரப்பான் கிள்ளான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சார்லஸ் சாண்டியாகோ முன்வைத்துள்ளார். (Apology to Migrants)

“புதிய நம்பிக்கை” – தொடர்ந்து உச்சத்தில் குணமடைவோர் எண்ணிக்கை.!

மலேசியாவில் சுமார் 35 லட்சம் ஆவனமற்ற அந்நியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு குடிநுழைவு அதிகாரிகள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த அந்நியர்களை வேளைக்கு அமர்த்தியுள்ள உள்நாட்டு முதலாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தாக தெரிகின்றது.

மலேசியாவில் கொரோனா தொற்றால் கள்ளக்குடியேறிகள் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்பு எழுத்து குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத குடியேறிகள் பலர் மலேசியாவில் கொரோனா தொற்று ஆளாகிவருவதால் அவர்கள் சோதனை செய்துகொள்ள முன்வர இந்த மன்னிப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர்.

மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram