வளிமண்டல காற்று சுத்திகரிப்பான் – மலேசிய அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆம்வே

amway

மலேசியாவில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான ஆம்வே (மலேசியா) ஹோல்டிங்ஸ் பி.எச்.டி, இன்று சுமார் RM858,600 மதிப்புள்ள 150 யூனிட் வளிமண்டல காற்று சுத்திகரிப்பு கருவிகளை கடந்த ஏப்ரல் 3ம் தேதி மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது, தீபகற்ப மலேசியாவின் லாபுவான், பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் இவை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் தனது கருவிகளை இரண்டாவது முறையாக அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கடந்த மாதம் பொது மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட முதல் தொகுதி காற்று சுத்திகரிப்பன்களுடன் சேர்த்து இதுவரை அந்த நிறுவனம் மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் சுமார் RM1.4 மில்லியன் மதிப்புடைய 250 கருவிகளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 100 அலகுகள் கொண்ட கருவிகளை சிலாங்கூரில் உள்ள 11 அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது, COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடியதற்காக மலேசியாவின் முக்கிய போர்க்களங்களில் ஒன்றான சுங்கை புலோ மருத்துவமனை, மார்ச் 17 அன்று வளிமண்டல காற்று சுத்திகரிப்பு அலகுகளைப் பெற்ற முதல் மருத்துவமனையாகும்.