“அலோர் சீடர் சிறைச்சாலையில் தொற்று” – 14 நாட்களுக்கு விதிக்கப்பட்ட இயக்கக்கட்டுப்பாடு..!

Alor Setar prison
Image Courtesy The Star

உலக அளவில் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே உலகை அச்சுறுத்தி வருகின்றது கொரோனா. அதே சமயம் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மலேசியாவில் 137 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக வெளியாகும் செய்திகள் பல மாத கடின உழைப்பை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது என்பது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மலேசியாவில் ஊரண்டங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று பலர் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து இந்த மருந்து கண்டறியப்படாத நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க : முதல் முறையாக 300ஐ தாண்டிய தொற்று எண்ணிக்கை – பீதியில் மூழ்கிய Sabah மற்றும் Kedah பகுதி..!

மலேசியாவில் சில மாதங்களுக்கு முன்பு (தீவிர கட்டுப்பாடு அமலில் இருந்த நேரத்தில்) தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொற்றே இல்லாத அளவில் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவில் தொற்றின் அளவு விண்ணை தொடுகின்றது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஓரே நாளில் உள்ளுர் தொற்று 317 என்ற மிகப்பெரிய அளவை எட்டியுள்ளது.

Sabah பகுதியில் 155 பேர், Kedah பகுதியில் 102 பேர், சிலாங்குர் பகுதியில் 32 பேர் என்று தொடர்ந்து பல இடங்களில் தொற்று உருவாகி வருகின்றது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தும் இந்த அளவுக்கு தொற்று பரவியுள்ளது வேதனை அளிக்கின்றது.

தற்போது kedah பகுதியில் இயங்கி வரும் அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் தொற்றின் அளவு உயர்ந்த நிலையில் அங்கு இயக்கக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது தற்போது சத்தியம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தேவைப்படும் இடங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாளை முதல் (அக்டோபர் 6) 14 நாட்களுக்கு அந்த சிறைச்சாலையில் இயக்கக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 14 நாட்கள் தடை காலத்தில் சிறை கைதிகளை காணவரும் குடும்பத்தினர் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram