“Air Transport Bubbles” – இந்தியா வந்து செல்ல புதிய விமான சேவை..?

Air Transport Bubbles
Image tweeted by Air India Express

ஏற்கனவே அண்டை நாடான இந்தியா வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் விமான சேவையை அளித்துவருகின்றது. மேலும் கூடுதலாக Air Transport Bubbles (ஏர் டிரான்ஸ்போர்ட் பப்புல்ஸ்) என்ற சேவையையும் வழங்குகிறது.

இந்த சேவை மூலமாக அமெரிக்கா, லண்டன், பூட்டான், பக்ரைன் உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இந்த சேவையை அளித்து வருகின்றது. (Air Transport Bubbles)

குறிப்பிட்ட அந்த 18 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும். இந்தியாவிலிருந்து அந்த 18 நாடுகளுக்கும் தற்போது சேவையை அளித்து வருகின்றது இந்தியா.

மேலும் இந்த சேவை தற்காலிக சேவை மட்டுமே என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் இக்கட்டான நிலையை சமாளிக்கவே இந்த சேவை என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த சேவை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“மலேசியாவில் அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும்”

மேலும் நாளையுடன் வந்தே பாரத் திட்டத்தின் அக்டோபர் மாத விமானங்கள் நிறைவுபெற உள்ளது. அடுத்தபடியாக நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்தே அடுத்த கட்ட பயணம் தொடங்கவுள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கும், மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கும் விமானங்களை சீராக இயக்கி வருகின்றது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

நவம்பர் மாதத்திற்கான பட்டியல் ஏற்கனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram