கோலாலம்பூரில் இருந்து 179 இந்திய பயணிகளுடன் சென்னை புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்..!!

Air India from KL to Chennai
Image tweeted by India in Malaysia

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா மற்றும் இதர விஷயங்களுக்காக பிற நாடுகளுக்கு சென்ற இந்தியர்களை அந்நாடு வந்தே பாரத் என்ற திட்டத்தின் அடிப்படையில் தற்போது தாயகம் சென்று வருகின்றது. இந்நிலையில் மலேசிய அரசின் உதவியுடன் கடந்த சில வாரங்களாக மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து செல்கிறது இந்திய அரசு.

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியை இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 179 பயணிகளுடன் இன்று புறப்பட்டது. இது தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms