“வந்தே பாரத் சிறப்பு விமானம்” – மலேசியாவிலுருந்து திருச்சி வந்திறங்கிய பயணிகள்..!

Air India Express
Image tweeted by air india express

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் பல நாடுகளில் இருந்து இந்தியர்களை தாயகம் (Air India Express) அழைத்துச்சென்று வருகின்றது அண்டை நாடான இந்தியா.

அதே சமயம் குறிப்பிட்ட பட்டியலை தாண்டி சில பயணிகள் வந்தே பாரத் மூலம் செயல்படும் சிறப்பு விமானங்கள் வழியாக (Air India Express) இந்தியா திரும்பி வருகின்றனர்.

பாதிப்படையும் இந்திய வியாபாரிகள்

இந்நிலையில் நேற்று அக்டோபர் மாதம் 27ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டெல்லி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அண்டை நாடான இந்தியாவில் இருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் வியாபாரம் மற்றும் வேலை நிமிர்தமாக வருகின்றனர்.

தற்போது உலக முழுக்க நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலில் பலர் வேலை இழந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.

அதே சமயம் வேலை மற்றும் வியாபாரம் நிமிர்தமாக இங்கு (மலேசியாவில்) வசித்தவர்களும் தாயகம் திரும்பி வருகின்றனர்.

அதே சமயம் தற்போது இந்தியாவில் இருந்து மீண்டும் பிற நாடுகளுக்கு விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், பக்ரின் உள்ளிட்ட நாடுகளுக்கு பாயிண்ட் டு பாயிண்ட் சேவையை மட்டும் தற்போது அளித்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram