“வாழ்நாள் முழுவதும் அப்படி வாழ முடியாது” – ஏர் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி..!

Air Asia
Image Tweeted by Air Asia

உலக அளவில் பட்ஜெட் விமானங்களுக்கு பெயர்பெற்ற நிறுவனம் (Air Asia) ஏர் ஆசியா என்பது மக்களின் கருத்து.

பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக அளவில் பூட்டுதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் (Air Asia) பல விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையால் இந்த கொரோனா காலகட்டத்தில் உலக சுற்றுலா மற்றும் விமான சேவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ஏர் ஆசியா நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அவர்கள்.

இதையும் படிங்க : “தொடர்ந்து உயரும் தொற்று” – Sabah-விற்கு அரசு விரைந்து உதவ வேண்டும்..!

அவர் வெளியிட்ட அறிக்கையில் சுற்றுலா விசாவில் செல்லும் மக்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவை தவிர்த்து அவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய அரசுகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

தாய்லாந்து மற்றும் ஆசியா கண்டத்தை சார்ந்த பல நாடுகள் சுற்றுலாவை நம்பியே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு, மலேரியா போன்ற வியாதிகளை போல இந்த நோயுடனும் நாம் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் விரைவில் விமான போக்குவரத்தை அனுமதிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

நம்மால் வாழ்நாள் முழுவதும் ஓர் குகையில் வாழ இயலாது என்றும் நிறுவன தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஏர் ஆசியா நிறுவனத்தின் எல்லைகள் திறப்பதற்காக அனைவரும் காத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஏர் ஆசியா தற்போது உள்நாட்டு போக்குவரத்தில் கவனம்செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram