ஏர் ஆசியா : பயனாளர்களுக்கு பேக்கேஜ் வரம்பு குறித்து புதிய சலுகை அறிவிப்பு..!!

Air Asia
Image Tweeted by Air Asia

விமான பயணங்களின்போது பயன்பாட்டாளர்களுக்கு பெரிய தலைவலியாக பார்க்கப்படுவது அவர்கள் கொண்டுவரும் பேக்கேஜ்கள் என்றால் அது மிகையல்ல. இந்த பேக்கேஜ்களை பொறுத்தவரை ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் அதற்கென்று தனி வழிமுறைகளை வைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஏர் ஆசியா நிறுவனம் இந்த பேக்கேஜ் குறித்த ஒரு சிறப்பான தகவலை தனது ட்விட்டர் தளத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் “விமான பயணத்திற்கான தேவை அதிகரிக்கும் போது, ​​ஏர் ஏசியா அதன் கேபின் பேக்கேஜ் கொடுப்பனவு குறித்த புதிய சலுகையை 7 ஜூலை 2020 முதல் வழங்க விரும்புகிறது, இந்த சலுகையில் விருந்தினர்கள் மொத்தம் 7 கிலோ எடையை தாண்டாத இரண்டு (2) கேபின் சாமான்களை கொண்டுவர அனுமதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொதிகளின் அளவு எடை குறித்த தெளிவான தகவல்களை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.