திருச்சி – கோலாலம்பூர் : கூடுதலாக இயக்கப்படும் இரண்டு விமானங்கள்.!

Additional Flights to KL
Image Tweeted by Air India Express

இம்மாதம் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏற்கனவே குறிப்பிட்டதை விட அதிகமாக இரண்டு விமானங்கள் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இயக்கப்படவுள்ளது. (Additional Flights to KL)

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (Additional Flights to KL)

“அவசரநிலை பிரகடனம்” – மாமன்னரின் முடிவை எதிர்த்து வழக்கு பதிய முடியாது.!

ஏற்கனவே இம்மாதம் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை பல விமானங்களை திருச்சி – கோலாலம்பூர் மார்கமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கிவருகின்றது.

இந்த நிலையில் தற்போது, மேலும் இரண்டு கூடுதல் விமானங்களை அந்நிறுவனம் மலேசியாவிற்கு இயக்கவுள்ளது.

மேலும் இந்த இரண்டு கூடுதல் விமானங்கள் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கும், பிறகு கோலாலம்பூரில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கும் செல்லவிருக்கிறது.

இந்த இரண்டு விமானங்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பயணமுகவர்கள் மூலம் அதை பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான மார்ச் மாத பட்டியல் அண்மையில் வெளியானது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து பல விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றது.

மார்ச் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இயக்கப்பட உள்ளது.

மேலும் மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram