“மணிக்கட்டு பட்டையுடன் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள்.?” – சுகாதார அமைச்சகம்.

Pink Bracelet
Image tweeted by Noor Hisham Abduallh

பிங்க் நிற மணிக்கட்டு பட்டையுடன் கட்டுமான பகுதியில் வெளிநாட்டில் இருந்து மலேசியா வந்த தொழிலாளர்கள் வேளைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (Pink Bracelet)

கொரோனா இந்த உலகில் பிறப்பெடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் இன்னும் நிலைமை சீரடையாமல் உள்ளது. (Pink Bracelet)

“கோலாலம்பூர் to தமிழ்நாடு” – டிசம்பர் மாத விமானப் பட்டியல் வெளியீடு.!

பிற நாடுகளை போல கடந்த 7 மாத காலத்திற்கும் மேலாக பிற நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்கள். இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை மலேசியாவிற்கு திரும்ப வர அனுமதித்துள்ளது மலேசிய அரசு.

இந்நிலையில் அவ்வாறு பிற நாடுகளில் இருந்து தாயகம் வருபவர்கள் அரசு நியமித்துள்ள இடங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர்.

பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். சோதனையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் முகாம்களில் தனிமைபடுத்தப்படுவர்.

அதே சமயம் தொற்று இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்படுவர். ஆனால் அங்கும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களை தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், நோய் தொற்று இல்லாதவர்கள் மைசெஜாத்திரா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவேண்டும், அதுமட்டும் இல்லாமல் தனிமைபடுதப்படும் காலம் முழுவதும் அவர்கள் அந்த கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும்.

அவ்வாறு குறிப்பிட்ட நாளுக்குள் அந்த கைப்பட்டையை அகற்றுவோர் மீது விதிமீறலுக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்நிலையில் கட்டுமான பகுதி ஒன்றில் இரு வெளிநாட்டு தொழிலாளர்கள் கையில் பிங்க் நிற மணிக்கட்டு பட்டையுடன் வளம் வரும் புகைப்படங்களை நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.

இது தற்போதைய சூழலை குறிக்கின்ற வண்ணம் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வு குறித்த முழு விளக்கத்தை தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram