முடிவுக்கு வந்த குழப்பம் – மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு

muhyiddin yassin

கடந்த 1981ம் ஆண்டு மலேசியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மகாதீர் பின் முகமது, ஏறத்தாழ சுமார் 22 ஆண்டு கால ஆட்சிக்கு பின்னர் கடந்த 2003ம் ஆண்டு திரு மகாதீர் பின் முகமது தனது பிரதமர் [பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு மீண்டும் கடந்த 2018ம் ஆண்டு மகாதீர் பின் முகமது மலேசியாவின் பிரதமராக மீண்டும் களமிறங்கினார். ஆனால் அவர் பதவி ஏற்ற அந்த ஆண்டு முதலே அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பல எதிர் கட்சிகள் கூறிவந்தன. அன்று முதல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மகாதீர் அவர்களின் தலைமையிலான ஆட்சி கடும் குழப்பத்திற்கு மத்தியில் தான் நடந்து வந்தது.

இந்த சமயத்தில் தான், தானே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் தனது ராஜினாமா கடிதத்தை அவர் மலேசிய மன்னரிடம் அளித்தார். அவருடைய கடிதத்தை ஏற்ற மன்னர், அடுத்த மன்னர் பதவி ஏற்கும் வரை மகாதீர் அவர்களையே மலேசியாவின் இடைக்கால பிரதமராக இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன் பிறகு படு குழப்பத்தில் சிக்கி தவித்த மலேசிய அரசியல் களத்தில் தற்போது ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவின் எட்டாவது பிரதமராக பத்தி ஏற்றுள்ளார் பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின், இன்று காலை சுமார் 10.30 மணியளவில் பேரரசர் முன்னிலையில் சிறிய சிம்மாசன அறையில் புதிய பிரதமரின் பதவியேற்பு நடைபெற்றது. மத்திய அரசியலமைப்பின்படி அல்-சுல்தான் அப்துல்லா முகிதீனை புதிய பிரதமராக நியமித்தார்.