“இந்தியர்கள் உள்பட 32 நாடுகளை சேர்ந்த 11,280 பேர்” – Quarantine முடிந்து வீடு திரும்பினார்..!

Quarantine
Picture Courtesy straitstimes.com

உலக அளவில் பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸை தடுக்க மலேசிய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதே சமயம் அதில் வெற்றியும் பெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் முகக்கவசத்தையும் கட்டாயமாகியது.

இந்நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

ஹோட்டல் உரிமையாளரான இவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக அப்போது மேலும் நால்வருக்கு தொற்று உறுதியானது.

இதையும் படிங்க : “Restoration MCO” – “சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை” – மலேசிய பிரதமர் திட்டவட்டம்

இந்நிலையில் அந்த தனி நபரால் சுமார் 40-க்கும் அதிகமானோருக்கு கெடா மற்றும் பல பகுதிகளில் தொற்று பரவியது. அதன் பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை வீட்டில் தனிப்படுத்திக்கொள் அனுமதித்த நிலையில் இது போன்ற சம்பவங்களால் மலேசியா திரும்பும் அனைவரும் கட்டாய அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த இக்கட்டான சூழலில் நேற்று இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பிய 12 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியர்கள் உள்பட 32 நாடுகளை சேர்ந்த 11,280 பேர் தனிமைப்படுத்ததால் மையத்தில் இருந்து தற்போது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எண்டு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 24ம் தேதியில் இருந்து இவர்கள் முழுமையான தனிமைப்படுத்துதலுக்கு பிறகே வீட்டிற்கு அனுப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram