COVID – 19 : வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 8 பேருக்கு நோய் தொற்று உறுதி..!!

noor hisham abdullah

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று மட்டும் 37 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8303 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 25 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 6635 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79.91 ஆக உள்ளது.

மேலும் இன்று ஒருவர் மலேசியாவில் கொரோனா காரணமாக பலியாகியுள்ள நிலையில், இதுவரை மலேசியாவில் கொரோனா காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று பாதிக்கப்பட்ட 37 பேரில் 8 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும், 10 பேர் வெளிநாட்டவர் என்றும் மீதமுள்ள 10 பேர் மலேசியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.