COVID – 19 : மலேசியாவில் கொரோனா பாதித்த 70 சதவிகிதம் மக்கள் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

Noor Hisham

கடந்த சில நாட்களாக மலேசியாவில் 40-க்கும் குறைவாகவே கொரோனவால் புதிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மலேசியாவில் பாதிப்புக்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 116 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6298 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 87 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 4413 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 70 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் கொரோனா காரணமாக நேற்று இருவர் இறந்த நிலையில் மலேசியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 116 பேரில் 52 பேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.