கோலாலம்பூர் – தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து தப்பிய ஏழு வெளிநாட்டினர்..

Quarantine Centre

கோவிட் 19 உலகை அச்சுறுத்தி வரும் நேரத்தில் அனுதினமும் இந்த நோயை முற்றிலும் அழித்துவிட மலேசிய அரசு அயராது பாடுபட்டு வருகின்றது. பிற நாடுகளில் இருந்து தாயகம் அழைத்துவரப்படும் மலேசியர்களால் அண்மையில் கொரோனா பாதிப்புகள் மலேசியாவில் அதிகமான நிலையில் தற்போது அந்த அளவு குறைய தொடங்கி மீண்டும் சகஜ நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. நாட்டில் பல இடங்களில் போக்குவரத்துக்கு மெல்ல மெல்ல தொடங்கி வருகின்றது.

இந்நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருந்த பிறநாடுகளை சேர்ந்த ஏழு பேர் கடந்த திங்கள் அன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக கருதப்படும் அந்த வெளிநாட்டினருக்கு இன்றோடு (07.05.2020) தனிமைப்படுத்துதல் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா பரவலை குறித்து மஸ்ஜித் இந்தியா, சிலாங்குர் மேன்ஷன் மற்றும் மெனாரா சிட்டி 1, போன்ற இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.