பள்ளிப் பேருந்து ஓட்டுனர்களுக்கு 600 ரிங்கட்..!! – மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்..!!

school bus driver

கொரோனா நோய் தொற்றால் மக்கள் உயிர் பலியாகி வரும் நிலையில், நடுத்தர மக்களின் வாழ்க்கையும் அன்றாட பிழைப்பை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரமும் உலக அளவில் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகின்றது. மலேசியாவில் கடந்த சில வாரங்களாக தொற்றின் அளவு குறைந்து கொண்டே வருகின்றது என்றபோது கோவிட் 19ல் இருந்து மலேசிய இன்னும் முழமையாக மீளவில்லை. இந்நிலையில் உள்ளூர் தொழிலார்களின் வாழக்கை தரத்தை முன்னேற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சில வாரங்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை பிற நாட்டு தொழிலார்களுக்கு மலேசியாவில் அனுமதி வழங்க கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்க அரசு முடிவு செய்தது, உள்ளூர் தொழிலார்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மலேசிய முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 35,000 பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு உதவி தொகையாக சுமார் 600 ரிங்கட் வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.