“இந்தியர்கள் மலேசியாவில் நுழைய தடை.?” – அதிரடி சட்டத்தை விதித்த மலேசிய அரசு..!

Ismail Sabri Yakob

அண்டை நாடான இந்தியா உலக அளவில் கொரோனா பரவல் உள்ள நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் சுமார் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்னனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 5 மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அங்கு தொற்றின் அளவு சற்றும் குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “இவர் தான் எங்கள் நிறுவன COO” : போலியான விளம்பரம் – எச்சரித்த நூர் ஹிஷாம் அப்துல்லா..!

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேஷியா அரசு ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றின் அளவு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மேற்குறிய மூன்று நாடுகளில் இருந்து யாரும் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Long Term Pass, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், Malaysia My Second Home Pass, Spousal visa வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் என்று மேற்குறிய யாருக்கும் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில், அரசின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது என்றும் தற்போது மலேசியாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வரவிருக்கும் குளிர்காலத்தை மனதில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் தொற்றின் அளவு அனுதினமும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram