மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று மட்டும் 31 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 7009 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மட்டும் 60 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 5706 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 81.4 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது.
மேலும் இன்று நல்வாய்ப்பாக மலேசியாவில் யாரும் கொரோனாவிற்கு பலியாகாத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 114ஆக உள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.