“50 சதவிகிதம் தள்ளுபடி” – மலேசிய பயணிகளுக்கு சிறப்பான சலுகையை அறிவித்த ஏர் ஆசியா..!!

Air Asia
Image Tweeted by Air Asia

விமான பயணங்களின்போது பயன்பாட்டாளர்களுக்கு பெரிய தலைவலியாக பார்க்கப்படுவது அவர்கள் கொண்டுவரும் பேக்கேஜ்கள் என்றால் அது மிகையல்ல. இந்த பேக்கேஜ்களை பொறுத்தவரை ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் அதற்கென்று தனி வழிமுறைகளை வைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஏர் ஆசியா நிறுவனம் அண்மையில் இந்த பேக்கேஜ் குறித்த ஒரு சிறப்பான தகவலை தனது ட்விட்டர் தளத்தின் மூலம் வெளியிட்டது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 4 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மலேசியாவில் உள்ளூர் சேவையை பயன்படுத்துவோருக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது ஏர் ஆசியா நிறுவனம். சுமார் 50 சதவிகிதம் வரை கட்டண குறைப்பை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது உலக அளவில் நிலவும் இக்கட்டான சூழலால் மக்கள் பெரிதும் விமான போக்குவரத்தை பயன்படுத்தாத நிலையில் அதை ஊக்குவிக்க இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கட்டண குறைப்பு குறித்த முழுத்தகவலையும் தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms

Related posts

COVID – 19 : ‘பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..!!’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

Web Desk

“சிவப்பு மண்டலமாகும் கூச்சிங்” – நவம்பர் 13 வரை பள்ளிகள் மூடப்படும்.!

Editor

‘மலேசியாவில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது..?’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

Web Desk