“Sabah பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று” – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!

Sivagangai Indian
Picture courtesy malaysia mail

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி),

இன்று ஒரே நாளில் 45 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது பாதிப்பு எண்ணிக்கையை 9628 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பல மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது தொற்றின் அளவு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்குள் இருந்து தொற்று மீண்டும் அதிகமாகி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : “85 உள்ளூர் தொற்று” – Sabah மற்றும் Kedah பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..?

மேலும் இன்று மட்டும் 24 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 9167 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95.2 சதவிகிதமாக ஆக உள்ளது.

இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 128ஆக உள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 45 பேரில் பிரேசில் நாட்டில் இருந்து தாயகம் வந்த ஒருவர் உள்பட 44 உள்ளூர் தொற்றுகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு தற்போது மலேசியாவில் 44 என்ற அதிக அளவில் உள்ளூர் தொற்று ஏற்பட்டிருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது.

LD Fortress என்ற புதிய க்ளஸ்டர் காரணமாக மலேசியாவின் சபா பகுதியில் மட்டும் இன்று 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sabah மற்றும் கெடா பகுதியில் தான் தற்போது அதிக அளவிலான உள்ளூர் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவிற்கு அதிக தொற்று என்பது சுகாதார துறைக்கு பெரிய சவாலாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram