கொரோனா தொற்று உள்ள 43 மாணவர்கள் – ‘பத்திரமாக மலேசியா அழைத்துவரப்பட்டனர்’

indonesia

கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா உற்பட பல நாடுகளில் சிக்கி இருந்த மலேசியர்கள் 200-க்கும் அதிகமானோர் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தோனேசியாவில் சிக்கி இருந்து 43 மாணவர்கள் மலேசிய அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இந்தோனேசியாவில் மாகேட்டனில் என்ற இடம் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து தான் இந்த மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் 34 பேர் மலாக்கா மாநிலத்திலும், எஞ்சிய ஒன்பது பேர் கோலாலம்பூரிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்” என்று சுகாதார அமைச்ச இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் கூறினார்.

இந்த நிகழ்வால் யாரும் கவலைகொள்ள வேண்டாம் என்றும், வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படும் அணைத்து மலேசியர்களும் கட்டாய தனிமை படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

வந்தே பாரத் : பயண நேரத்திற்கு 5 மணி நேரம் முன்னதாக வரவேண்டும் – இந்திய உயர் கமிஷன் மலேஷியா..!

Editor

வந்தே பாரத் : 4 நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கிய சேவை – திருச்சி வந்திறங்கிய பயணிகள்..!

Editor

கொரோனாவிற்கு எதிரான போராட்டம் – ‘மலேசியாவை பாராட்டும் சீன அதிகாரிகள்’

Web Desk