மலேசியாவை சேர்ந்த தந்தை, மகனிடம் நகை, பணம் கொள்ளை – 4 பேர் கைது

malaysia

சென்னை நந்தனத்தில் மலேசியாவைச் சேர்ந்த தந்தை மகனிடம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கடத்தல் தங்கத்தை பங்குபோடுவதில் நடந்த தகராறில் அந்த நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலேசியாவில், சிலோக் பங்க்லின்மா என்ற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு வயது 62. இவர் இந்தியாவில், சென்னை மாநகரத்தில் உள்ள தாம்பரத்தில் செயல்ப்பட்டு வந்த சித்தா மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொள்வதற்காக கடந்த 20ம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். நந்தனம் மேற்கு சிஐடி நகரில் உள்ள குபேர் இன் என்ற தாங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

லட்சுமணனின் மகன் கபிலன், தந்தையைப் காண கடந்த 25ம் தேதியன்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக லட்சுமணன் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் அவர்கள் சிஐடி நகரில் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினர். அப்போது அங்கு திடீரென வந்த மூன்று பேர் லட்சுமணனை கத்தியால் குத்திவிட்டு கபிலனிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் திருடிவிட்டு அங்கியிருந்து தப்பியோடினர்.

இந்த சமபவம் குறித்து சென்னை, சைதாப்பேட்டை போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டறிந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் லட்சுமணனிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வெளிநாட்டில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வரும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்ததுள்ளது.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் மலேசியாவில் இருந்து குருவியாக சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. தங்கம் கடத்தி வந்த கமிஷன் பணத்தை பிரிப்பதில் சென்னையில் உள்ள குருவிகள் சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகையால் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த 3 பேர் தந்தை, மற்றும் மகனை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.