“மலேசிய குடிநுழைவு மையத்தில் இருந்து மொத்தம் 367 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – இந்திய High கமிஷன்..!!

malaysia immigration
Image Tweeted by India in Malaysia

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு புக்கிட் ஜலில் மையத்தில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் கோவிட் 19 தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவருடைய இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தற்போது ஆய்வக அமுடிவுகளுக்காக காத்திருக்குறோம் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள் கூறியுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய High கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஒரு வாரத்தில் மலேசிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 367 இந்தியர்கள் பாத்திரமாக தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.