COVID – 19 : ‘புக்கிட் ஜலீல் குடிநுழைவு மய்யம்..!!’ – ’14 இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு நோய் தொற்று..?’

Bukit jalil

கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மலேசிய பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மலேசிய பிரதர் தன்னை தானே தனிப்படுத்துதலுக்கு உள்ளாகி உள்ளார்.

ஆய்வில் பிரதமருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி புதன்கிழமை அன்று புதிதாக மலேசியாவில் 50 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் கூறினார். அந்த 50 பேரில் 35 பேர் புக்கிட் ஜலீல் குடிநுழைவு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அந்த 35 பேரில் 15 இந்திய பிரஜைகள் மற்றும் 14 மியான்மர் பிரஜைகளும் அடக்கம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலேசிய அரசு சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவால் அவ்வாறு உள்ள மக்கள் பரிசோதைக்கு வர அஞ்சுவார்கள் என்றும் அதனால் பாதிப்பு கூடும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.