கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புக்கிட் ஜலீல் முகாமில் உள்ள சுமார் 600 இந்திய பிரஜைகளை மீட்க இந்திய தூதரகம் மலேசிய குடிநுழைவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் அண்மையில் வெளியானது. விசா காலாவதி ஆனா பின்னரும் மலேசியாவில் அவர்கள் தங்கி இருந்ததால் கைது செய்யப்பட்டதாக மலேசிய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
@hcikl repatrated 34 indians, who were held up in Bukit Jalil Detention Centre, to take #VandeBharatMission @airindiain flight to Chennai on 24 July. We thank @imigresenmy @MalaysiaMFA for their cooperation. @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/DMkEgW4FDz
— India in Malaysia (@hcikl) July 25, 2020
தற்போது அந்த புக்கிட் ஜலீல் மையத்தில் இருந்து 34 இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதி இந்த மாத இறுதி வரும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms