COVID – 19 : மலேசியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குணமடைவோரின் எண்ணிக்கை – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே பாமாயில் பிரச்சனை, அரசியல் பிரச்சனை என்று பல பிரச்சனைகளை சந்தித்து வந்த மலேசியாவை பெரும் அதிர்ச்சியுடன் அச்சுறுத்த வந்தது கொரோனா என்னும் நோய் தொற்று. பல வாரங்களாக கடும் பயத்தில் ஆழ்ந்திருந்த மலேசிய மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் விதமாக கடந்த சில வாரங்களாக மலேசியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் அளவு குறைந்து வருகின்றது.

தினமும் அன்றைய நாளில் ஏற்படும் பாதிப்பு பற்றி மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று ஏப்ரல் 17ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் சுமார் 69 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது இதுவரை பதிவான அளவில் மிகவும் குறைவான என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 201 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 2967 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை கொரோனாவால் மலேசியாவில் 5100-க்கும் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுவரை மலேசியாவில் 85 பேர் இந்த நோயின் காரணமாக இறந்துள்ளதாகவும், தற்போது நிலவும் கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பல கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.