‘சட்டவிரோத குடியேறிகள்..?’ – இந்தியர்கள் உள்பட 200 பேர் மலேசியாவில் கைது..!!

Illegal immigrants

கடந்த சில வாரங்களாக மலேசிய அரசு மற்றும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த தொழிலார்களை கைது செய்து வருகின்றனர். மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. அதே சமயம் உரிய ஆவணங்கள் இல்லாத பல நூறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்தியர்கள் உள்பட சுமார் 200 சட்டவிரோத குடியேறிகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுட்டள்ளனர். இது குறித்து பேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் பெட்டாலிங் ஜெயாபகுதியில் இருந்து இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 200 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை நடப்படட்டது என்று, அதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாக தகவல்கள் வெளியாகி உள்ளது.