மலேசியாவில் கொரோனா-வால் 19 பேர் பாதிப்பு – டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

coronavirus19

சீனாவை சேர்ந்த 39 வயதான பெண் மலேசியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதித்த 19 நபராக மாறியுள்ளார் என்று மலேசியா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலக நாடுகளுக்கு மிக பெரிய அச்சுறுதாலக மாறியுள்ளது இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய். உலக சுகாதார அமைச்சகம், பரவும் இந்த நோய் தொற்றை எப்போது முற்றிலும் அழிக்க முடியும் என்பதை கணக்கிடுவதில் மிக பெரிய சிக்கல் நிலவுவதாக கூறியுள்ளது.

உலகில் இந்த கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கு, இந்த நோய் குறித்த துல்லியமான அறிக்கையை உடனக்குடன் தங்களுக்கு அனுபி வைக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மலேசியாவில் இந்த நோய் தொற்றால் மேலும் ஒரு சீன பெண்மணி பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய டைரக்டர் ஜெனரல்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 14 வது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர், மற்ற நான்கு பேருடன் ஜனவரி 25 ஆம் தேதி மலேசியா வந்தடைந்தனர் என்றும். அவ்வாறு வந்தவர்களில் ஒரு பெண்ணுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் இருமலுக்கான அறிகுறிகள் தொடங்கவே, அவர் உடனடியாக மேல் சிகிச்சைக்கு கோலாலம்பூருக்கு அனுப்பப்பட்டார் என்று கூறினார். அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சையில் அவருக்கும் இந்த வுஹான் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.