கொரோனா : தாய்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் 144 மலேசியர்கள்

Thailand

கொரோனா அச்சத்தால் உலகில் உள்ள பல நாடுகள் வான் வழி, கடல் வழி மற்றும் தரை வழி என்று எல்லாம் வழியிலான பயணங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் பிற நாடுகளில் கொரோனா அச்சத்துடன் வசித்து வருகின்றனர் சில மக்கள். இந்நிலையில் இது போன்று தெற்கு தாய்லாந்து நாட்டில் சிக்கியுள்ள 144 மலேசியர்களை இன்று அந்நாட்டு அரசின் உதவியுடன் தாயகம் அழைத்துவர உள்ளது மலேஷியா.

தாய்லாந்து நாட்டில் இருந்து திரும்பி வரவிருக்கும் இந்த 144 பேரில் போண்டோக் பள்ளிகளின் மாணவர்கள், மற்றும் இங்கிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை தாயகம் அழைத்துவரை உதவிய எல்லா தாய்லாந்து நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக மலேசியாவின் துணைத் தூதரக அதிகாரி முஹமத் ரிட்ஜுவான் அபு யாசித் கூறியுள்ளார்.

பரவி வரும் இந்த கொரோனா அச்சத்தால் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தாய்லாந்து அரசாங்கம் மலேசியாவுடனான தங்களுடைய ஒன்பது எல்லை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளையும் மூடியது. குறிப்பிடத்தக்கது. மேலும் கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற மற்ற அண்டை நாடுகளின் எல்லையையும் முடியாது.