மலேசிய விமானநிலையம் – திருப்பி அனுப்பப்பட்ட 14 சீனா பயணிகள்

kolalampur airpot

பிறந்த இந்த ஆண்டு ஒரு மாத காலத்தை கடந்துள்ள நிலையில், மலேசியா மட்டும் இன்றி உலகின் பல நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது, இதுவரை மலேசியாவில் எட்டு பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும். அவர்கள் உடல்நிலையும் சீராக இருபதாகவும் களநிலவரங்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று வுஹானில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த 14 பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். இதுகுறித்து மலேசிய நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்று பல நாடுகளுக்கு பெரும் அச்சமாக விளங்கும் நிலையில் தங்கள் நாட்டிற்குள் வரும் சீனா பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

புகிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் முஹைதீன் யாசின் பேசியபோது வுஹான் மாகாணத்தில் இருந்து 14 பயணிகள் மலேசியாவின் கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையம் வருகின்றனர் என்ற செய்தி கிடைத்ததும், விமான நிலைய அதிகாரிகள் சுகதரத்தை விட்டுக்கொடுக்காமல் கடுமையான வழிமுறைகளை பின்பற்றி அவர்கள் அனைவரையும் திரும்ப அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.

அனுதினம் வுஹன் நகரில் இருந்து வரும் செய்திகள் உலக நாடுகள் அனைத்தையும் சோகத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையல்ல, இந்நிலயில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க சுமார் நூர் கோடி நிதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.