COVID – 19 : மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 பேருக்கு தொற்று – 12 பேர் பூரண குணம்..!!

Noor Hisham Abdullah
Image Tweeted by Noor Hisham Abdullah

இன்று ஜூலை 10ம் தேதி 2020 மதியம் 12:00 மணி நிலவரப்படி மலேசியாவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் மொத்த நேர்மறை COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையை 8,696 வழக்குகளாகக் அதிகரித்துள்ளது. தற்போது COVID-19 நோய்த்தொற்றுடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களின் அளவு 64 ஆக உயர்ந்துள்ளது.

அறிவிக்கப்பட்ட 13 புதிய வழக்குகளில், எட்டு பேர் வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பியவர்கள். அதில் ஆறு பேர் மலேசிய குடிமக்கள் மற்றும் இரண்டு குடிமக்கள் அல்லாதவர்கள் (நிரந்தர குடியிருப்பாளர்கள்) என்று தகவல் வெளியாகியுள்ளது . மேலும் உள்ளூரில் 5 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் தொற்று இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை பொறுத்தவரை தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக கோவிட் 19 இன்னும் ஓர் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் முதல் மலேசியாவில் நடமாடக்கட்டுப்பாட்டில் தளர்வு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.