அவதியுறும் சிரியா நாட்டு மக்கள் – நேசக்கரம் நீட்டிய மலேசிய நாட்டு ‘அமைப்பு’

syria refgee

தொடர் போர் மற்றும் உள்ளநாட்டு பிரச்சனையால் அனுதினம் பல உயர்களை பலிகொடுத்து வருகிறது சிரியா. பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை தினமும் மரண ஓலம் கேட்கும் ஒரு நாடக மாறியுள்ளது சிரியா. உள்நாட்டில் உள்ள சில கிளர்சியலர்களை அழிக்கும் நோக்கி ரஷ்ய நாட்டு படையின் உதவியுடன் சிரியா அரசு போராடி வருகிறது, ஆனால் இந்த படைகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் பலியாவது பொதுமக்களே.

தற்போது இந்த அளவுக்கு பாதிப்பினை சந்திக்கும் சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு GPM எனப்படும் Global Peace Mission என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு வாடும் மக்களுக்கு தனது நேசக்கரத்தை நீட்டியுள்ளது மலேசியா நாட்டை சேர்ந்த ஒரு அமைப்பு.

இது குறித்து பேசிய GPMன் மலேசியா நாட்டிற்கான தலைவர் அஹ்மத் பாஹ்மி முஹமது, சுமார் 3000க்கும் மேற்பட்டட உணவு பொட்டலங்கள். படுக்கை விரிப்பு, கம்பளம் உள்ளிட்ட குளிர் தடுக்கும் சாதனங்கள் அடங்கிய பை ஆகியவை சிரியா நாட்டில் வாடும் மக்களுக்கு அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிரியாவில் குறிப்பாக அகதிகள் முகாமில் இரவு நேரங்களில் கடும் குளிரில் வாடும் மக்களுக்கு இவை கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி, நேற்று முடிவடைந்தாக தகவல்கள் தெரிவிகின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த GPMன் மலேசிய தலைவர், Huda எனப்படும் மலேசிய தொண்டு நிறுவனம் ஒன்றும், WeCare என்று அழைக்கப்படும் ப்ருனெய் நாட்டில் இருந்து வந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்த பணியில் தங்களுடன் சிறப்பாக பணியாற்றியதாக அவர் தெரிவித்தார்.

இந்த முகாம் மூலம் 12000 பேர் பலன் அடைந்ததாக கூறிய அவர், தானும் தனது குழுவும் சிரியா எல்லைப்பகுதியில் ஒரு நாள் இரவு அங்கு தங்கி அவர்கள் படும் இன்னல்களை உணர்ந்ததாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார். அரசியல் சண்டையில் மக்கள் இவ்வாறு துன்புறுவது மிகவும் வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.