பெட்ரோல் நிலையம் : இந்திய பிரஜைகள் உள்பட உரிய ஆவணம் இல்லாத 12 பேர் மலேசியாவில் கைது..!!

malaysia petrol

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்களும் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலைபார்த்த இந்திய பிரஜைகள் உள்பட சுமார் 12 பேரை கைது செய்துள்ளனர். அந்த நிலையத்தில் உள்ள உணவகம், வாகனம் சுத்தம் செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் வேலைபார்த்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 1959 மற்றும் 1963ம் ஆண்டு குடிநுழைவு விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.