மலேசியா – “100 பில்லியன் வெள்ளி நஷ்டத்தில் சுற்றுலாத்துறை.?”

Tourism in Malaysia
Image tweeted by Tourism Malaysia

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தால் சுமார் 100 பில்லியன் வெள்ளி அளவிற்கு சுற்றுலாத்துறை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Tourism of Malaysia)

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரான நான்சி சுக்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Tourism of Malaysia)

கோலாலம்பூர் to திருச்சி – “அனைத்து புதன்கிழமைகளிலும் விமான சேவை”

மலேசியாவில் தற்போது 35 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் சுற்றுலாத்துறையில் வேலைசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதில் ஒரு பகுதி பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.

இந்த தகவலை மலேசியவின் தேசிய சுற்றுலா மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவர் எரிக் ஆர். சின்னையா ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதிகள், போக்குவரத்து, உணவு போன்ற பல விஷயங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் முடிவுக்கு வர இருந்த நிலையில் அந்த கட்டுப்பாடு இவ்வாண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. (Tourism of Malaysia)

இந்நிலையில் மீட்சிக்கான இந்த கட்டுப்பாட்டில் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உறுதியாக அண்மையில் தெரிவித்தார் பிரதமர்.

இந்த அறிவிப்பினால் மலேசியா முழுவதும் சுற்றுலாவும் அதை நம்பியுள்ள மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை சுற்றுலாத் துறையை சேர்ந்த சுமார் 20 விழுக்காடு பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக சின்னையா தெரிவித்துள்ளார்.

இந்த நிலை நீடித்தால் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா தாக்கத்தால் சுற்றுலாத் துறை மீண்டு வருவது கடினமாகியுள்ளது என்றார் அவர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram