“Palm Oil – செம்பனை எண்ணெய்” – மலேசியாவுடன் வர்த்தகத்தை அதிகரித்த சீனா..!

Palm Oil
Image tweeted by FoodNavAsia

மலேசியாவுடன் பாமாயில் (Palm Oil) வர்த்தகத்தை இந்தியா பல மாதங்கள் கழித்து மீண்டும் கடந்த மே மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலேசியாவுடன் பாமாயில் (Palm Oil) வர்த்தகத்தை அதிகரிக்க சீனா ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த மே மாதம் அண்டை நாடான இந்தியா மலேசியாவுடனான தனது பாமாயில் (Palm Oil) வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

உள்நாட்டு சரக்குகளின் வீழ்ச்சி மற்றும் தள்ளுபடி விலைகள் ஆகியவற்றால் கொள்முதல் நிலை தூண்டப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : “நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்படும்” – மலேசிய ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி..!

முன்னணி இந்திய இறக்குமதியாளர்கள் பலர் மே மாத தொடக்கத்தில் சுமார் 200,000 டன் அளவு வரையிலான பாமாயிலை (Palm Oil) மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த தகவலை அப்போது பிரபல இந்திய நாளிதழான டைம்ஸ் of இந்தியா தெரிவித்தது.

அதே மே மாத தொடக்கத்தில் சுமார் 100,000 டன் அளவிற்கு அரிசியை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய மலேசியா ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரவிருக்கும் 2023ம் ஆண்டு வரை மலேசியாவிலிருந்து சுமார் 1.7 மில்லியன் டன் அளவிற்கு செம்பனை எண்ணெய்யை  வர்த்தகம் செய்ய சீன அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த தகவலை ஸ்ரீ ஹிஷாமுதீன் துன் ஹுசின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யீயுடனான சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரும் 2023ம் ஆண்டு வரை 1.7 மில்லியன் டன் அளவிற்கு சீனா செம்பனை எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது மிகப்பெரிய செயலக பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram