“மறுபரிசீலனை செய்யுங்கள்” – வணிகர்கள் சங்கம், நூர் ஹிஷாம் அப்துல்லாவிற்கு கோரிக்கை.!

Corona Vaccine Doses
Image Tweeted by BERNAMA

நாட்டில் 70 முதல் 80 விழுக்காடு தடுப்பூசி போடும் பணி முடிவடையும்வரை மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை கடக்க சில தடைகள் விதிக்கப்பட்டது. (Merchants Petition)

ஆனால் இந்த எல்லைகளில் உள்ள தடைகள், வர்த்தகத்தை பெருமளவு பாதிக்கும் என்றும் இதனால் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (Merchants Petition)

“இன்று முதல் மலேசியாவில் பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன”.!

நாடு முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான அங்கத்தினரை கொண்ட Business Survival Group என்ற அமைப்பு உள்ளது.

அப்துல்லா அவர்களின் இந்த அறிக்கை, அந்த அனைவரையும் மிகவும் கவலையுற்ற செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நூர் ஹிஷாம் அவர்களின் அறிக்கை நுகர்விரையும் பெருமளவு குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகையால், அவருடைய அந்த அறிக்கையை தயவுகூர்ந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. அதே சமயம் நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் அளிக்கும் பணியும் தற்போது முழுவீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கை விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram