“2000 ஊழியர்கள் வேலையிழப்பு..?” – இழப்பீட்டு தொகை வழங்கும் மலிண்டோ நிறுவனம்.!

Malindo Air
Twitter Image

மலிண்டோ விமான சேவை நிறுவனம் (Malindo Air) தங்களுடைய பணியாளர்கள் 2000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ் மலர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இதை தெரிவித்துள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் சிலாங்கூர் பகுதியை தலைமையகமாக கொண்டு நிறுவப்பட்டது தான் Malindo Air விமான சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

“Johor Bahru பகுதியில் பள்ளிகள் மூடல்”

மலேசியாவின் ‘Mal’ இந்தோனேசியாவின் ‘indo’ என்பதை இணைத்தே “மலிண்டோ” என்ற பேரை அந்த நிறுவனம் பெற்றது.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனமும் பிற விமான சேவை நிறுவனத்தை போல தற்போது பெரும் இழப்பை சந்தித்து வருகின்றது .

இந்த கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் விமான சேவை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றது.

அந்த வரிசையில் மலிண்டோ தங்களுடைய பாண்டியர்கள் 2000 பேரை வேலைநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகையாக அவர்களுது 3 மாத ஊதியத்தை வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த தொகையை மூன்று தவணைகளில் ஊழியர்களுக்கு அளிக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் சுமார் 15 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டியவர்களுக்கு 3 தவணையாகவும். 15000 வெள்ளிக்கு மேல் இழப்பீட்டு தொகை பெற உள்ளவர்களுக்கு 6 தவணையாகவும் அந்த தொகையை தர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram